PL BOOK TICKETS IMMEDIATELY.
அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம் !
நம்முடைய
அஞ்சல் JCA வின் 39 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும்
04.12.2014 அன்று அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்றம் நோக்கிய பேரணி குறித்து
ஏற்கனவே நம்முடைய வலைத்தளத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம் . இது
உங்களுக்கு நினைவிருக்கும் . நம்முடைய தமிழகத்தில் இருந்து இந்த பேரணிக்கு
பெருவாரியான எண்ணிக்கையில் நம்முடைய உறுப்பினர்கள் கலந்துகொள்ள இலக்கு
நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே
25.11.2011 மற்றும் 26.07.2012 தேதிகளில் நடைபெற்ற பாராளுமன்றம் நோக்கிய
பேரணியில் நம்முடைய தமிழகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட தோழர்கள்
கலந்துகொண்டு இலக்கை முறியடித்தது நம் தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாறு.
இந்த நிலை இந்தப் பேரணியிலும் தொடரவேண்டும் .
அதற்கு
நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம் இப்போதே பயணத்திற்கான ரயில் டிக்கெட்களை
முன்பதிவு செய்திட வேண்டும் என்பதுதான். அந்த நேரத்தில் நிச்சயம்
டிக்கெட்கள் கிடைக்காது. இப்போதே காலதாமதம்தான். இனியும் கால தாமதம்
செய்யாதீர்கள். உடன் உங்கள் கோட்ட/ கிளைகளில் இருந்து ஊழியர்களை
திரட்டுங்கள். டிக்கெட்களை முன்பதிவு செய்யுங்கள் . எத்தனை பேர் டெல்லி
வருகிறீர்கள் என்பதை மாநிலச் சங்கத்திற்கு SMS மூலமோ அல்லது EMAIL
மூலமோ தகவல் அனுப்புங்கள். அங்கு தங்குவதற்கான ஏற்பாட்டினை மத்திய
சங்கம் செய்திட நாம் முன் கூட்டியே தகவல் தரவேண்டும் .
நிச்சயம் இன்றே அந்தப் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறோம். உடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்.
பேரணி வாழ்த்துக்களுடன்
NFPE அஞ்சல் -RMS இணைப்புக் குழு ,
தமிழ் மாநிலம் .
மற்றும் அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கம்.
No comments:
Post a Comment