AIPEU GDS
NFPE சங்கத்தின் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் எதிர்வரும்
28.02.2016 அன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் பார்சல் ஆபீஸ் எதிரில் உள்ள
SRMU சங்கக் கூட்ட அரங்கில் காலை 09.00 மணி தொடங்கி முழு நாள் நிகழ்வாக
நடைபெற உள்ளது.
இதில்
முக்கிய தலைவர்களான தோழர். M . கிருஷ்ணன், தோழர். K . ராகவேந்திரன்,
தோழர். K .V . ஸ்ரீதரன் , தோழர். R .N . பராசர் , தோழர். P .
பாண்டுரங்கராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றிட உள்ளார்கள்.
GDS ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா தலைமையிலான ஊதியக்குழுவுக்கு நாம்
அளிக்க வேண்டிய கோரிக்கை மனு குறித்தும், பிப்ரவரி இறுதி வாரத்தில்
அறிவிக்கப்பட உள்ள GDS ஊழியர் சங்கங்களுக்கான உறுப்பினர் சரிபார்ப்பில்
நம்முடைய AIPEU GDS NFPE சங்கத்தை முதன்மை சங்கமாக ஆக்கிடுவது
குறித்தும் விரிவான விவாதம் நடைபெற உள்ளது.
எனவே NFPE
சம்மேளனத்தின் உறுப்பு சங்கங்களின் அனைத்து கோட்ட / கிளைச் செயலர்களும்
தவறாது இந்த கருத்தரங்க மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பு சேர்க்க
வேண்டுகிறோம். தங்கள் பகுதியில் இருந்து GDS தோழர்களை பெருமளவில்
கலந்துகொண்டிட முழு முயற்சி எடுத்திட வேண்டுகிறோம்.
அஞ்சல் மூன்று
மாநிலச் சங்க நிர்வாகிகள்/கோட்ட/ கிளைச் செயலர்கள், தங்கள் மண்டலங்களில்
இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த, அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம்
கேட்டுக் கொள்கிறது. மத்திய மண்டலத்தில் உள்ள அஞ்சல் மூன்று மாநிலச் சங்க
நிர்வாகிகள், GDS மாநிலச் சங்கத்துடன் இணைந்து பணியாற்றி கருத்தரங்க
நிகழ்வு சிறந்திட தங்களின் முழு உழைப்பையும் நல்கிட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment