FOR MEMBERS ONLY

PROUD TO BE A NFPE MEMBER

யாருக்கும் அஞ்சோம் !!எதற்கும் அஞ்சோம்!!!




Tuesday, 28 April 2015

ONE GLORIOUS NEWS...

அன்பு  தோழர்களே, தோழியர்களே, வணக்கம்.
                   பல இடயூர்களுக்குஇடையில், நாம் GDS  தோழர்களுக்கு நடத்திய சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு இரண்டு தோழர்கள் தபால்காரர் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர்  என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறோம் .இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிறப்பு வகுப்புகள் எடுத்த  நமது    முன்னாள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  திரு R.  கருங்கண்ணன் அவர்களுக்கும் அஞ்சல் உதவி கோட்ட கண்காணிப்பாளர்    திரு G. பாலாஜி  அவர்களுக்கும் நமது ஆலோசகர் திரு R.  நடராஜன் அவர்களுக்கும் தலைமை அஞ்சல் அலுவலர் திருமதி R.வெண்ணிலா  அவர்களுக்கும் நம் NFPE பேரியக்கத்தின் சார்பாக மனதார நன்றி  தெரிவித்துகொள்கிறோம். இது போன்ற சிறப்பு வகுப்புகள் இனி எதிர்வரும் நமது அனைத்து  துறை தேர்வுகளுக்கும் நடைபெறும் என்பதை  தெரிவித்துகொள்கிறோம்.

தேர்வில் வெற்றிபெற்றவர்கள்:
1.S.Ganapathi
   GDS BPM
    P.AGARAHARAM
    A\W PAUPARAPATTI SO
    

2.SIVASANKARAN
   ADAKAPADI BO





நமது தோழர் ஒருவரின் கவிதை

 ஓய்வின்றி உழைப்பவரே
 ஓய்வுபெற்ற பின்பும் உழைப்பவரே
 பிறந்த ஊரின் மேம்பாட்டிற்கு தம்மை
முழுமையாக ஈடுபடுத்தியவரே
மாணக்கர்களை தகுதி தேர்வுகளுக்கும்
 ஊளழியர்களை துறை தேர்வுகளுக்கும்
தயார்படுத்துவதில் வல்லுனரே
 எங்கள் வகுப்புகளை தன் வகுப்பாகியவரே
 இனிய உரையால் அழகுபடுத்தியவரே
 தோழர்கள் தேர்வில் வெற்றிபெற காரணமானவரே
முன்னாள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளரே 
திரு R.  கருங்கண்ணன்  அவர்களே
 நன்றி!    நன்றி!!      நன்றி!!!




ஊழியர் நலனில் அக்கறை கொண்டவரே
 ஊழியர்  நலனுக்காக  அயராது உழைப்பவரே
 எங்கள் வகுப்புகளில் கணிதத்தினை கடைந்து
அமுது  படைத்தவரே
மாணவர்களின் வெற்றிக்கு காரணமானவரே
எங்கள் அஞ்சல் உதவி கோட்ட கண்காணிப்பாளரே 
 திரு G. பாலாஜி  அவர்களே
நன்றி!    நன்றி!!      நன்றி!!!



அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் 
NFPE எனும் மாபெரும் பேரியக்கத்தின்
 நிரந்தர  ஆலோசகரே
எங்கள் வகுப்புகள் தொடர்ந்திட ,ஊக்கத்தினை கொடுத்தவரே
புத்தகக தயாரிப்புக்கு நன்கொடையை  வழங்கியவரே
திரு R.  நடராஜன் அவர்களே
நன்றி!    நன்றி!!      நன்றி!!!



வகுப்புகள் நடத்திட தலைமை  தபால் அலுவலகத்தில் 
அனுமதி வழங்கி
அவர் களின் வாழ்வை வசந்தமாக்கிய 
திருமதி R.வெண்ணிலா அவர்களே
நன்றி!    நன்றி!!      நன்றி!!!



வேரின்றி விழுதுகள் இல்லை
அது இயல்பு
ஆயினும்  தருமபுரி 
 NFPE இயக்கத்தில் விழுதுகள்
 இன்றி  வேரில்லை
 இது சிறப்பு.

வகுப்புகள் சிறந்த முறையில் நடத்திட   ஒத்துழைப்பு அளித்த தோழர்களுக்கும் வகுப்புகள் எடுத்த தோழர்களுக்கும் நன்கொடை வழங்கிய  தோழர்களுக்கும்
நன்றி!    நன்றி!!      நன்றி!!!

1 comment:

  1. அஆ.மிக்க மகிழ்ச்சி.உண்மையிலேயே இது ஒரு மகிழ்ச்சியான தருணம்.

    ReplyDelete

UNITY IS STRENGTH

UNITY IS STRENGTH
PROUD TO BE A NFPE MEMBER

DHARMAPURI DIVISION OFFICE PHONE NUMBERS !!!

SELECT OFFICE NAME


PHONE NUMBERS: