அஞ்சல் நிலையங்களை வங்கியாக மாற்றுவதற்கான அவசர
சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய
அரசு
திட்டமிட்டு வருவதாக தகவல்
வெளியாகியுள்ளது. அனைவருக்கும் வங்கிச் சேவையை
விரிவுபடுத்தும் நோக்கில் புதிய
வங்கிகள் தொடங்க உரிமம்
வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி
கடந்த
ஆண்டில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, கிராமங்களிலும் கிளைகளைக் கொண்ட
அஞ்சல்
துறையும் வங்கிச் சேவையில் ஈடுபட
விண்ணப்பித்திருந்தது. எனினும், அஞ்சல்
துறையை
வங்கிப் பணியில் ஈடுபட
அனுமதிப்பது குறித்து மத்திய
அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று
ரிசர்வ் வங்கி
தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த
நிலையில், அஞ்சல்
வங்கியை அனுமதிக்க அடுத்த
மாதத்தில் சட்டம்
கொண்டு வர
அரசு
பரிசீலித்து வருவதாக அஞ்சல்
துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, பிரதமர் தலைமையில் கடந்த
வாரம்
நடந்த
அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அஞ்சல்
நிலையங்களை வங்கிகளாக மாற்றுவதற்கான மாதிரி
திட்ட
அறிக்கை பிரதமரிடம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment