அன்புத்
தோழர்களுக்கு இனிய வணக்கம் ! கடந்த வாரம் நம்முடைய CPMG அவர்கள்
GHAZIABAD சென்றிருந்த காரணத்தால் நம்முடைய மாநிலச் சங்கத்தின் புதிய
நிர்வாகிகள் பட்டியல் அவரிடம் அளிக்க இயலவில்லை. இன்று (14.09.2015) மாலை
சுமார் 05.30 மணியளவில் நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின்
சார்பில் நம்முடைய மாநிலச் செயலர் தோழர் J .R ., முன்னாள் மாநிலத் தலைவர்
தோழர் ஸ்ரீவி , இந்நாள் மாநிலத் தலைவர் தோழர். P .மோகன் , மாநில நிதிச்
செயலர் தோழர். A . வீரமணி , மாநில உதவிச் செயலர் தோழர். C . மோகன் , மாநில
உதவி நிதிச் செயலர் தோழர். N . கோபால், நம்முடைய அகில இந்திய சங்கத்தின்
முன்னாள் செயல் தலைவர் தோழர். N.G., அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர்
தோழர். G .கண்ணன் , RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K . ரமேஷ் , மாநில
மகிளா கமிட்டி தலைவர் தோழர் ஏஞ்சல் சத்தியநாதன் உள்ளிட்ட தோழர்கள்
நம்முடைய CPMG அவர்களை சந்தித்து நிர்வாகிகள் பட்டியலை அளித்து புதிய
நிர்வாகிகளை அறிமுகம் செய்தோம் . DPS HQ அவர்கள் உடன் இருந்தார்.
சந்திப்பின் தேங்கிக் கிடக்கும் பல்வேறு ஊழியர்கள் பிரச்சினைகள் குறித்து
கடிதம் அளித்து விவாதித்தோம் . அந்த கடிதத்தின் நகல் கீழே காணவும் .பேட்டி சுமுகமாக நடைபெற்றது.
பிரச்சினைகள் மீது CPMG அவர்கள் அளித்த பதில் குறித்து கீழே சுருக்கமாக தெரிவித்துள்ளோம்.
1. LGO விலிருந்து எழுத்தராக பதவி உயர்வு பெற நடத்திய தேர்வின் முடிவுகள் வெளியிட விரைவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2.
LSG பதவி உயர்வு பட்டியல் வெளியிட APAR BENCH MARK மீது
அனுப்பப்பட்டுள்ள மேல்முறையீடுகள் விரைவாக DISPOSE செய்யப்பட்டு
வருகின்றன. APAR இறுதி
செய்யப் பட்டவுடன் LSG பதவி உயர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
3. SUNDAY PAID OFF தற்போது GDS மற்றும் REVISED WAGES /DA வழங்கிட உரிய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
4. தற்போது
பண்டிகை நாட்களில் விரைவுத்தபால் பட்டுவாடா முற்றிலும் நிறுத்தப்
பட்டது. எங்கேயாவது பிரச்சினை இருந்து புகார் அளிக்கப்பட்டால் உரிய
நடவடிக்கை எடுக்கப்படும்.
5. திண்டுக்கல்
தொழிற்சங்க அறிவிப்பு பலகை எடுக்கப்பட்ட பிரச்சினை மீது உரிய அறிவுறுத்தல்
கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிரச்சினை தீர்க்கப்படும்.
6. Sr . PM ,ERODE மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
7. நாமக்கல் கோட்ட பிரச்சினையில் விரைவு நடவடிக்கை கோரப்பட்டுள்ளது .
8. தருமபுரி, தாம்பரம் வடசென்னை உள்ளிட்ட கோட்டங்களில் நீண்ட காலம்
DEPUTATION மற்றும் OVER TENURE குறித்த விபரங்கள் கேட்கப்பட்டு தற்போது
மாநில அலுவலகம் வந்துள்ளன . அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
9. RULE 38 இடமாறுதல் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு , DESERVING
ஊழியர்கள் பிரச்சினைகளில் உரிய RELAXATION நிச்சயம் செய்யப்படும்.
குறிப்பிட்ட பிரச்சினை இருந்து , அது குறித்து தெரிவித்தால்
மறு பரிசீலனை செய்யப்படும்.
=============================================================================
No. P3/2- Genl. dt. 14.09.2015
To
The Chief Postmaster
General,.
Tamilnadu Circle,
Chennai 600 002.
Respected Sir,
Sub:
Request for attention on some urging
pending cases – Reg.
….
You may aware that all the union under NFPE
have conducted one day strike on 26.03.2015 on specific charter of
demands, and many of them are unsettled
till time. Moreover, most of the items are again placed in the RJCM meeting held on
06.08.2015. But till time there is no settlement on these issues. Some of the
urging items are again reproduced below for the
kind personal attention of our
CPMG, TN so as to take immediate action
for settlement.
1. Releasing the results
in case of LGO
to P.A. exam. for the year 2014.
2. Grant of Long pending LSG promotions and resultant
HSG II/HSG I promotions/filling up of
the vacancies in HSG I
posts , by maintaining at the level of HSG II, as per revised
rectt. rules.
3. Non grant of revised D.A. and Sunday paid off
to Casual Labourers & GDS outsiders.
4. Withdrawal of Speed
delivery duty in all religious holidays ordered in Southern
Region/CCR.
5. Restoration of union
Notice boards removed arbitrarily at Dindigul Division.
6. Enquiry and action
requested on the continued harassment of staff by the Sr. PM, Erode HPO.
7. Request for confiscation
of properties in the SAS agent fraud case at Namakkal; Grant of
outsourcing to manage the abnormal shortage of staff,
because of the irregular assessment of
vacancies.
8. Recall of long pending
deputationists/over tenured officials/working in sensitive branches
atTambaram, Dharmapuri dns. etc.
9. Request for relaxation
of 5 years condition in Rule 38 transfers on spouse category/ mutual/medical grounds cases, as agreed in the earlier RJCM meeting and practiced for the past
several years in TN Circle.
With regards,
sd/-
(J. RAMAMURTHY)
CIRCLE SECRETARY.
Thank u Com.JR & Com.VP.
ReplyDeleteCom.MVK