இயக்க உணர்வு கொள்வோம் !
வைரவிழாவில் சங்கமிப்போம் !
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ! .
NFPE தமிழ்
மாநில இணைப்புக்குழுவின் சார்பில் நம்முடைய சம்மேளன வைர விழா மற்றும்
நம்முடைய இயக்கத்தின் ஒய்வு பெற்ற மூத்த தலைவர்களுக்குப் பாராட்டு விழா.
இது நமது
குடும்ப விழா ! அனைத்து தலைவர்களையும் , நம் இயக்கத்தின் அகில இந்திய
சங்கங்களின் /மாநிலச் சங்கங்களின் நிர்வாகிகளையும் /கோட்ட/ கிளைச்
சங்கங்களின் தளபதிகளையும் அன்பான தோழர்களையும் , தோழியர்களையும் இருகரம்
நீட்டி வருக வருக என வரவேற்புக் குழு சார்பில் இனிதே வரவேற்கிறோம்.
எந்த வேலை இருந்தாலும் தள்ளி வைத்து விட்டு இந்த விழாவில் கலந்துகொண்டிட வேண்டுகிறோம்.
கடந்த 60
ஆண்டுகளில் நம் இயக்கத்திற்காக தங்கள் உடல் , பொருள் , நேரம் என்று
எல்லாவற்றையும் அர்ப்பணித்து அயராது பணியாற்றிய மூத்த தலைவர்களை நாம்,
நம் காலத்தில் ஒருசேர அழைத்து பாராட்டு செய்வது என்பது ஓர் அரிய நிகழ்வு
ஆகும். அரிய வாய்ப்பும் ஆகும் .
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் .
சென்னை மாநகரமே அஞ்சல் தோழர்களால் நிரம்பட்டும் !
இன்று அஞ்சல்
துறையை CORPORATISE செய்திட TASK FORCE ஆல் திட்ட முன் வடிவு
அரசுக்கு அளிக்கப் பட்டுள்ளது. அதனை எதிர்த்து போராட நம் சம்மேளன வரலாறு
நமக்கு உணர்வுகளை அளிக்கட்டும் !.
நம் மூத்த தலைவர்களின் போராட்ட வரலாறு நமக்கு வழி காட்டட்டும் ! உணர்வு கொள்வோம் ! உறுதி கொள்வோம் !
தியாகங்களை நாமும் மேற்கொள்ள தயாராவோம் !
இலாக்கா காத்திடுவோம் ! வைரவிழாவில் சங்கமிப்போம் !
No comments:
Post a Comment