அன்புத் தோழர்களே ! தோழியர்களே !! வணக்கம் !
மத்திய அரசு
ஊழியர்களுக்கு போனஸ் உச்ச வரம்பு நீக்கப்படவேண்டும் என்று நாம் பலகாலம்
போராடி வருகிறோம். செப். 2 , 2016 வேலை நிறுத்த கோரிக்கைகளில் இதுவும்
ஒன்று. கடந்த ஆண்டு இதே ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பின் விளைவாக 11
மையத் தொழிற் சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் பின்னர் ,போனஸ்
உச்சவரம்பை ரூ. 3500/- உள்ளிருந்து ரூ. 7000/- ஆக உயர்த்திட மத்திய
அமைச்சரவைக்கு குழு முடிவெடுத்து, பின்னர் நிதி அமைச்சகத்தினால்
உத்திரவும் இடப்பட்டு , GAZETTE NOTIFICATION கூட வெளியிடப்பட்டது
உங்களுக்கு மறந்திருக்க முடியாது .
ஆனால்
பின்னர் இந்த உத்திரவு மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தாது என்று
அறிவிக்கப்பட்டதும் உங்களுக்குத் தெரியும் . ஆனால் நேற்று மத்திய அரசின்
நிலையில் மாற்றம். 29.8.2016 அன்று மத்திய நிதி அமைச்சகத்தால் 2014-2015
நிதி ஆண்டிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ( PLB மற்றும் ADHOC
BONUS) போனஸ் உச்சவரம்பு ரூ. 3500/- இலிருந்து ரூ. 7000/- ஆக உயர்த்தி
வழங்கப்படும் என்ற உத்திரவை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment