பதிவு செய்த நாள் -
செப்டம்பர் 27, 2014, 3:02:46 PM
மாற்றம் செய்த நாள் -
செப்டம்பர் 27, 2014, 3:37:25 PM
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளிகள் என
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரம்
இன்னும் சிறிது நேரத்தில் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.
144 தடை உத்தரவு
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பை முன்னிட்டு, பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று இரவு முதல் 48 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என பெங்களூரு மாநகர காவல் ஆணையர் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

No comments:
Post a Comment